கோவை, செப்.12: கேலோ இந்தியா சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான பெண்களுக்கான டேக்லோண்டோ போட்டி தர்மபுரியில் நடைபெற்றது. இதில், 17 வயதுக்கு உட்பட்ட 42 கிலோ பிரிவில் கோவையை சேர்ந்த வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி கேசிகா மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
+
Advertisement