கோவை, செப்.11: கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதி அருகேயுள்ள டி.கே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (38). இவர், சாமி ஐயர் புது வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தங்க நகை செய்யும் வேலை பார்த்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நகைப்பட்டறை உரிமையாளரிடம் இருந்து சுப்பிரமணி நகை செய்ய தங்கக்கட்டிகளை வாங்கி உள்ளார். அதன்பின் 4 பவுன் நகையை திருப்பி கொடுத்துள்ளார். மீதி நகையை விரைவில் திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.