கோவை, அக். 10: கோவை நீலாம்பூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக 9வது மண்டல அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 27ம் தேதி கோவை சிஐடி கல்லூரியில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. இதில், கோவையை சேர்ந்த பல கல்லூரிகள் பங்கேற்றனர். அரையிறுதி போட்டியில் சிஐடி, ஸ்ரீ சக்தி கல்லூரி அணி மோதியது. இதில், ஸ்ரீ சக்தி கல்லூரி 10-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர், இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லூரி, பார்க் பொறியியல் கல்லூரிகள் மோதின. இதில், ஸ்ரீ சக்தி கல்லூரி மாணவர்கள் 10-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 5 வருடங்களாக வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement