கோவை, அக். 9: கோவை மாநகராட்சி சார்பில், தமிழக முதல்வரின் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ சேவை முகாம் தெற்கு மண்டலம் 87வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் பாலக்காடு மெயின்ரோடு ஆயிஷா மஹாலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில், கண் மருத்துவம், பல் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், நுரையீரல் மருத்துவம், தோல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் சித்தா, ஆயர்வேதம் மருத்துவம் உள்ளிட்ட 18 மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் இம்முகாமில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது. எனவே, பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகு
+
Advertisement