கோவை, அக். 9: கோவையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு என ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் மற்றும் பிரத்யேக மார்பக புற்றுநோய் மையம் செயல்படுகிறது. இந்நிலையில், கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் மாதத்தையொட்டி, பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிங்க் வண்ண நிகழ்ச்சியுடன் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா. பழனிசாமி, மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பலர் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இது கேஎம்சிஎச் மார்பக சிகிச்சை மையத்தின் 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், எஸ்பி கார்த்திகேயன், கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா மற்றும் பொதுமக்கள், மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், கேஎம்சிஎச் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.