கோவை, அக். 9: கோவை செல்வபுரம் அருகே உள்ள இந்திரா நகர் அருள்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (40). இவரது வீட்டில் வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் புவனேஸ்வரி (24) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் செல்போன், ரூ.10 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணகுமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் செய்து வந்த புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் புவனேஸ்வரி 6 கிராம் தங்க நகை, 96 கிராம் வெள்ளி கொலுசு, செல்போன் மற்றும் ரூ.10,000 ஆகியவற்றை திருடியதை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து போலீசார் புவனேஸ்வரி கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து போலீசார் வெள்ளி, செல்போன் மற்றும் ரூ.10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.