கோவை, செப். 9: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இதேபோல், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று வடக்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண் 11 மற்றும் 21 பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், சரவணம்பட்டி - சத்தி சாலையில் உள்ள குளோபஸ் நிலையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறுகிறது. இதன் காரணமாக, மாநகராட்சியில் நடைபெற இருந்த குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.