கோவை, செப். 9: கோவை சாய்பாபா காலனி விசிகேஎன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர், நேற்று முன்தினம் காலை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். ரயில் நிலையம் அருகே பஸ் வந்த போது அவரது அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மணிகண்டன் பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டு பஸ்சில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர், ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர், பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த கார்த்தி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.