கோவை, டிச.8: கோவை சவுரிபாளையத்தி்ல் உள்ள புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலயத் தேர்த் திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 30 ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தினமும் திருப்பலியும், நவநாளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், கூட்டு பாடல் திருப்பலியும், அதில் புதுநன்மையும், உறுதி பூசதலும் நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற தேர் பவனியை, நல்லாயன் கிறிஸ்துவ கல்லூரி பேராசிரியர் அருட்தந்தை ஆல்பட் துவக்கி வைத்தார். இந்த தேர் பவனி சவேரியார் ஆலயத்தில் இருந்து கல்லறை வீதி, ரட்சகர் புரம், தேர்வீதி வழியாக ஆலயத்தை மீண்டும் வந்தடைந்தது. இதில், பங்கு தந்தை ஜார்ஜ் ரொசாரியோ, உதவி பங்கு தந்தை அருள் இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


