கோவை, அக். 8: தந்தை பெரியார் திராவிடர் கழக (த.பெ.தி.க) பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு அதிசய மனிதர் என்றும் இந்தியாவின் எடிசன் என்றும் மக்களால் போற்றப்பட்ட சுயமரியாதை இயக்கம் காலந்தொட்டு பெரியாரோடும், பெரியார் இயக்கத்தோடும் தோழமை கொண்டிருந்தவரும் கோவை தொழில் வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றியவரும் பல புதுமைகளை உலகிற்கு கொண்டு வந்தவருமான ஜி.டி.நாயுடு பெயரை சூட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் ஜி.டி.நாயுடு பெயருக்கும், கோவை மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கின்ற திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.