கோவை, அக்.8: கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சாஹின் (33). இவர், சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததால், கோவை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் தெற்கு சரக காவல் துணை கமிஷனர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், உத்தரவின் பேரில் சாஹின் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement