கோவை, அக. 7: கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் குமரன் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மாரிமுத்து (30). இவரது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாரிமுத்து கடைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு உரிமை இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரது கடையில் இருந்து 4 பட்டாசு பெட்டிகளை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
+
Advertisement