கோவை, அக். 7: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று(7ம் தேதி), நாளை (8ம் தேதி) என இரண்டு நாட்கள் நடக்கிறது. பயிற்சி கட்டணம் ரூ.1,770. பல்கலையின் அறுவடை பின்சார் பயிற்சி மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடக்கிறது. இதில், முருங்கையில், முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் போன்றவையும், காளானில் இருந்து காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட் ஊறுகாய், பிழிதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement