தொண்டாமுத்தூர், நவ.6: தொண்டாமுத்தூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, ஒடிசா தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே தொண்டாமுத்தூர் போலீசாருக்கு மாதம்பட்டி ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ பிரபாகரன் மற்றும் குழுவினர் சோதனை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரண் பிரதான் (45), நாகு பிரதான் (40) ஆகியோரிடம் இருந்து,10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
+
Advertisement
