Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடி நாளில் அதிக நிதி வசூல் ஊராட்சி உதவி இயக்குநருக்கு கலெக்டர் பாராட்டு சான்று

கோவை, ஆக.6: கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறையினர் கொடி நாள் நிதி வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது.  இதற்கு இலக்கு வைத்து நிதி வசூல் செய்யப்பட்டு வந்தது. இதில், கோவை மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் 12.65 லட்சம் ரூபாய் வசூல் செய்தனர். 12 லட்சம் ரூபாய் இலக்கு வைத்த நிலையில் கூடுதலாக நிதி வசூல் செய்து அசத்தி விட்டனர்.

இதற்காக மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஊராட்சி உதவி இயக்குநர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழக கவர்னரில் பாராட்டு சான்று மற்றும் வெள்ளிப்பதக்கமும் அவருக்கு வழங்கி கவுரவம் செய்யப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு துறையினரும் கொடி நாள் நிதி வசூல் செய்து அசத்தியுள்ளனர். கொடி நாள் நிதியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.