Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வ.உ.சி மைதானத்தில் கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா

கோவை, நவ. 1: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் 8 நகரங்களில் சங்கமம் நம்ம ஊருதிருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா வ.உ.சி மைதானத்தில் இன்று (1ம் தேதி) மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் (பொ), மாவட்ட கலெக்டர், எம்பி.,க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொள்ள உள்ளனர். கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் கடலூர் சுதாகர், சரஸ்வதி குழுவினரின் நிகழ்ச்சி, திரைப்பட பாடகர்கள் ஜான் சுந்தர், நவக்கரை நவீன் பிரபஞ்சன் ஆகியோரின் பாடல்கள் மற்றும் இசைக்குழுவினர் 75 கலைஞர்கள் இணைந்து நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், ஜிக்காட்டம், தேவராட்டம், பம்பையாட்டம் ஆகிய கலைகளுடன் நடைபெறுகிறது.

நாளை (2 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கலைகளை 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற்று பிரமாண்டமாக ஒரே மேடையில் நிகழ்த்தப்பட உள்ளனர். இவ்விழாவில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு கண்டு களிக்க மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.