கோவை: கோவை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதிர்ந்தவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் இந்த மாதம் 5, 6, 7ம் தேதி குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நாள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும். தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர் அனைவரும் இல்லத்திற்கே வரும் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடையலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.