கோவை, அக்.29: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவ ஆய்வு படிப்பிற்கு பயன்படுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்களை தானமாக வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஊழியர்கள் தங்கள் இறப்பிற்கு பிறகு உடலை தானமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நாளை (அக்.30) வழங்க உள்ளனர். முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட 60 மூத்த நிர்வாகிகள், 15 பெண்கள் உட்பட 100 பேர் உடல் தானம் செய்யும் சட்ட ரீதியான ஒப்புதல் படிவங்களை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் ஒப்படைக்க உள்ளனர். இறப்பிற்கு பின்னர் வீணாக செல்லும் உடல்களை மருத்துவ மாணவர்களின் ஆய்விற்காக தானமாக வழங்குவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
+
Advertisement
