தொண்டாமுத்தூர், அக்.28: மருதமலையில் சூரசம்ஹார விழாவில் முருகப்பெருமான் தனது ‘வேல்’ கொண்டு சூரபத்மன் ஆணவத்தை அழித்தார். இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கிறது.
கோவை அருகே மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடம் தோறும் கந்த சஷ்டிவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் கடந்த 22ம் தேதி துவங்கியது. யாக சாலை பூஜை துவங்கி.
உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று காலை மூலவர் சுப்பிரமணியசுவாமி மற்றும் உற்சவருக்கு சண்முகார்ச்சனை நடந்தது. மாலை 3 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளும் முருகப்பெருமான் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
