தொண்டாமுத்தூர், செப்.24: ஒன்றிய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவை பிரச்சாரத்தை முன்வைத்துள்ளது. பொது சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ஆறு, குளம், பள்ளி, கல்லூரி வளாகங்கள் போன்ற பொது இடங்களை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் மூலமாக தூய்மை பணிகள் செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளது. தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் ‘தூய்மையே சேவை’ பணிகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் பா.செல்வம் துவங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்வாக கல்லூரி வளாகங்களை சுத்தப்படுத்தினர். தொடர்ந்து, ஒரு வாரம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பல்வேறு பொது இடங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
+
Advertisement