கோவை, ஆக.19: கோவை மாவட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக மாவட்டத்தில் 98.5 சதவீத மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெற்றோரை இழந்த மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு பள்ளி பொறுப்பு அலுவலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் தொண்டு நிறுவனத்தினர் மூலம் 15 மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி அஞ்சனக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.