கோவை, நவ.11: டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரோந்து பணிகள் மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கோவை ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய வளாகம் மட்டுமின்றி பயணிகள் உடமை, பார்செல் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் சோதனை செய்தனர். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே, ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
+
Advertisement

