பெ.நா.பாளையம், நவ.11: கோவை மாவட்டம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கோவையை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் (35) என்பவர் மீது பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் பவன்குமார், பிரகாஷ் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி மத்திய சிறையில் இருக்கும் தொடர் வழிப்பறி வழக்கின் குற்றவாளியான பிரகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
+
Advertisement

