கோவை, டிச.9: கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குடிநீர் ெதாட்டி ஆபரேட்டர்கள், சுய உதவி குழு மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்தல், சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தினர்.
இதில், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராஜாக்கனி, ரத்தினகுமார், பார்த்திபன், ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். ஊழியர்கள் போராட்டத்திற்கு பின்னர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் முன் ஸ்டேட் பாங்க் ரோட்டில் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில், 130 ஊழியர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். வேலை வாய்ப்பை பறிக்கு அரசாணைகளை வாபஸ் பெற வேண்டும். பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் குறைந்த ஊதியம் பெற்று பணியாற்றும் ஒப்பந்த சுய உதவி குழுவினர், தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையை வாபஸ் பெற வேண்டும்.


