கோவை, டிச.9: கோவையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 15 கிராம் தங்க நகைகளைத் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர், கோவை சாமி அய்யர் வீதியில் தங்க நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நகைக்கடை உரிமையாளர்கள் கொடுக்கும் தங்கக் கட்டிகளை ஆபரணமாக செய்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில், நவநீதகிருஷ்ணன் வழக்கம் போல கடந்த 6ம் தேதி (சனிக்கிழமை) இரவு 11 மணியளவில் பட்டறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் பட்டறையின் அருகில் குடியிருந்து வரும் சரவணன் என்பவர் எழுந்து பார்த்த போது பட்டறைக் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.
இதுகுறித்து அவர் நவநீதகி ருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, ரூ.1 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ 15 கிராம் நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்ற விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலமும் ஆய்வு செய்யப்பட்டது.


