கோவை, டிச. 6:நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தொழிலாளியை அடித்து உதைத்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ் (20). இவர், போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது, அவரது நண்பர் ஹரிஷ் என்பவர் அவருக்கு போனில் அழைத்து தன்னை குறிச்சி பகுதியில் 2 பேர் தாக்கியதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரித்தீஷ் உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஹரிசை தாக்கிய நபர்களை தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், ரித்தீசையும் தகாத வார்த்தைகளால் திட்டி பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

