கோவை, டிச. 5: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நடக்கிறது. மாவட்ட அளவில் வீடு,வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. பூர்த்தியான படிவங்கள் திரும்ப பெறும் பணிகள் நடக்கிறது. நேற்று வரை வழங்கப்பட்டிருந்த கால கெடு, வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் எஸ்ஐஆர் பணி முடியவில்லை.
கோவை வடக்கு, தெற்கு, ஆனைமலை, சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பணிகள் நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது. இதர தொகுதிகளில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ஏற்கனவே தேர்தல்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இறப்பு சான்று பெற்றவர்களை தன்னிச்சையாக தேர்தல் பிரிவினரால் நீக்க முடியவில்லை. இருப்பினும், அந்த குடும்பத்தினர் ஒப்புதல் பெற்று நீக்க வேண்டியிருக்கிறது.

