கோவை, ஆக.5: தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி தேர்வு போட்டி ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்தது.
இதில், இந்தியா முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட பளு தூக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். யூத், சப் ஜூனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், தமிழகம் சார்பில் மாஸ்டர்ஸ் பிரிவில், ஈச்சனாரி அருகே டாஸ்மாக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வரும் ஈஸ்வரன் (48) என்பவர் பங்கேற்றார்.
இதில், பெஞ்ச் பிரஸ் பிரிவில் ஈஸ்வரன் 100 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். அதேபோல ஸ்குவாட் பிரிவில் 160 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற டெட் லிப்ட் பிரிவில் 200 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.