கோவை, ஆக.5: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர்.
இதேபோல், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.