Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வேளாண் பல்கலை.யில் உயிர்ம வேளாண் பயிற்சி

கோவை, ஆக. 5: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு நாள் உயிர்ம வேளாண்மை பயிற்சி வரும் 7ம் தேதி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.700 ஆகும்.

இந்த பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 0422 2455055/ 6611206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பயிற்சிக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். இதில், உயிர்ம வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்கள், தொழில்நுட்பங்கள் குறித்து செய்முறை வாயிலாக கற்றுத்தரப்படும். பயிற்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு உயிர்ம வேளாண்மை பற்றிய புத்தகமும், பங்கேற்று சான்றிதழும் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.