கோபி, ஆக. 5: கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் ராமநாதன் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி கோகிலா (53). கூலித்தொழிலாளி. குமார், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இந்நிலையில் கோகிலாவின் மகன்மணிகண்டன்(19), கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தாயை பிரிந்து சேலம் அருகே நாக்கியம்பட்டியில் உள்ள தந்தையின் உறவினர்களுடன் சேர்ந்து...
கோபி, ஆக. 5: கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் ராமநாதன் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி கோகிலா (53). கூலித்தொழிலாளி. குமார், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் கோகிலாவின் மகன்மணிகண்டன்(19), கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தாயை பிரிந்து சேலம் அருகே நாக்கியம்பட்டியில் உள்ள தந்தையின் உறவினர்களுடன் சேர்ந்து எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கோகிலா நேற்று முன் தினம் மகனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த மகனிடம், கோபியிலேயே வேலை செய்து கொண்டு,தன்னுடனேயே தங்குமாறு கூறி உள்ளார்.
அதை மணிகண்டன் ஏற்க மறுத்து சேலத்தில் தான் வேலை செய்ய போவதாக கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த கோகிலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.