வேலாயுதம்பாளையம், அக். 31: திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (25). இவரது மனைவி மாணிக்கவல்லி (21 ).இவர்கள் தற்போது கரூர் புகளூர் சிமெண்ட் ஆலை அருகே உள்ள மூலிமங்கலம் கருப்பசாமி ஸ்டோர் வீடு பகுதியில் வாடகைக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணிக்கவள்ளிக்கு குறைந்த எடையில் பெண் குழந்தை பிறந்தது. 34 நாள் ஆன பெண்குழ்ந்தைக்கு 20 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்தனர் .நேற்றுமுன்தினம் மாணிக்கவள்ளி குழந்தைக்கு பால் கொடுத்துள்ளனர். பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைத்துள்ளார்.
வெளியில் சென்று விட்டு குழந்தையை வந்து பார்த்தபோது குழந்தை அசைவு இல்லாமல் கிடந்தது. உடனடியாக குழந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபாஷினி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 
  
  
  
   
