கரூர், ஆக. 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை வழியாக செல்லும் வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை வழியாக வாய்க்கால் செல்கிறது. குடியிருப்புகளை ஒட்டி இந்த வாய்க்கால் செல்கிறது. இதன் காரணமாக போதிய பராமரிப்பின்றி வாய்க்கால் புதர்கள் மண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வாய்க்கால் புதர்மண்டி உள்ளதால் விஷ ஐந்துகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த வாய்க்கால் பகுதி முழுதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இநத வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு மக்கள் நலன் கருதி அதனை து£ய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.