வேலாயுதம்பாளையம், ஆக. 29: கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 30-ந்தேதி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நொய்யல்,
குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா தெரிவித்துள்ளார்.