கரூர், ஆக. 29: புகழூர் நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழூர் நகராட்சியில், வார்டு எண்.5, 14, 15-க்கு ஆர்.எஸ்.ரோடு காந்தியார் மண்டபத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், நாகம்பள்ளி ஊராட்சிக்கு மலைக்கோவிலுார் ஈஸ்வரன் கோயில் மண்டபத்திலும், குளித்தலை வட்டாரத்தில், திம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது. மேலும், இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுசெய்து பயன்பெறலாம்.
+
Advertisement