கிருஷ்ணராயபுரம், ஆக. 29: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் கரூர் கோட்டப்பொறியாளர் ரவிக்குமார்,கிருஷ்ணராயபுரம் உதவிக்கோட்டப் பொறியாளர். கர்ணன் ஆலோசனைப்படி, மழைக்காலங்களில் சாலை ஓரங்களில், மண் அரிமானத்தை தவிர்க்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் அசாருதீன் தலைமையில் நேற்று திருக்காம்புலியூர் ஊராட்சி, மாவட்ட முக்கிய சாலையான மாயனூர் சேங்கல் பஞ்சப்பட்டி சாலை கிமீ. 3/6ல் மரக்கன்றுகள் நட்டு, லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. இதில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவியாளர் சுகுமார் மற்றும் சாலை பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
+
Advertisement