கரூர், ஆக. 27: கரூர் ராயனூர் அருகேயுள்ள நினைவுச் சின்ன ஸ்தூபியை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே நினைவு ஸ்தூபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு கூறும் வகையில் இந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
பழுதடைந்த நிலையில் இருந்த இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில், இந்த ஸ்தூபியின் முன்பு, பார்க்கிங் ஏரியா போல, அனைத்து இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் ஒரு சிலர் உள்ளே சென்று சரக்கு அடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்லும் நிகழ்வுகளும் இந்த பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கரூர் மாநகரில் உள்ள ஸ்தூபியை உள்ள சில ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.