கரூர், செப். 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட் செல்லும் சாலையில் கழிவு நீர் தேங்கி தொற்றுநோய்களைபரப்புப்கிறது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை வழியாக கரூரில் இருந்து வாங்கல், ஐந்து ரோடு, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுககு செல்லும் அனைத்து வாகனங்களும் பூ மார்க்கெட் வழியாக செல்கிறது.
இந்த பகுதியின் வழியாக குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.இந்நிலையில், சில காரணங்களால் கழிவு நீர் இந்த சாலையில் அதிகளவில் தேங்கி தொற்றுநோய்களை பரப்புகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூ மார்க்கெட் செல்லும் வழியில் தேங்கியுள்ள இந்த கழிவு நீரை விரைந்து அகற்றி தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.