Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கரூர், செப்.25: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமபொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -2 என்ற திட்டம் தொடர்பாக நாளை (26.9.2025) வெள்ளிக்கிழமை திறந்த வெளி மலம் கழித்தலற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது குறித்து சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கூட்டப்பொருள்: துய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -2 என்ற திட்டத்தின் கீழ் திறந்த வெளி மலம் கழித்தலற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது. இக்கூட்டத்தில் அந்தந்த கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.