கரூர், அக். 24: இறந்த மயில்களை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அப்புறப்படுத்திச் செல்ல தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் ஒருங்கிணைந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களின் பின்புறம் நூற்றுக்கணக்கான மயில்கள் வசித்து வருகிறது.
அவ்வாறு சுற்றித்திரியும் பல்வேறு காரணங்களால் இறக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதே போல், கருர் வெங்ககல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரமும் ஒரு மயில் இறந்து கிடந்தது. தேசிய பறவையாக உள்ள இநத மயிலை இறந்து கிடக்கும் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறொரு பகுதிக்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

