கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் இன்று நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் வார்டு எண் 8,9,10,11,12,13,14,15-ற்க்கு பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், மொடக்கூர் (கிழக்கு) மற்றும் மொடக்கூர் (மேற்கு) ஆகிய ஊராட்சிகளுக்கு கோவிலுார் சமுதாய கூடத்திலும், குளித்தலை வட்டாரத்தில், திம்மம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு நல்லுார் கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறலாமென கலெக்டர் தெரிவித்தார்.
+
Advertisement