வேலாயுதம்பாளையம், நவ.21: கரூர் மாவட்டம் புகளூர்செம்படம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் கரும்புகளை கொட்டி சாறு பிழியும் இடத்திற்கு மேல் பகுதியில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி சர்க்கரை ஆலைக்குள் பணியாற்றும் தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் தீண்டியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் அச்சுறுத்தி வந்த மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள்.
+
Advertisement


