வேலாயுதம்பாளையம், நவ.21: பெண் அரசு ஊழியரை தாக்கி செயின் பறிப்பு, போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கூலக் கவுண்டனூர் வைரவேல் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சிவகாமி(54). இவர் கரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சிவகாமி அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணிக்கு பைக்கில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது புகழூர் அருகே செங்காட்டனூர் பிரிவு எதிரே இரு மர்ம நபர்கள் சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை பிடுங்கியுள்ளனர்.
அப்போது சிவகாமியை திடீரென மர்ம நபர்கள் தள்ளியதால் சாலையில் சிவகாமி கீழே விழுந்தையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்துதப்பிச் சென்று விட்டனர். கீழே விழுந்த சிவகாமியை கரூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகாமியின் மகன் தியானேஸ்வரன்( 26 ) அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.


