க.பரமத்தி, ஆக. 21: பட்டியலின விடுதலைப் பேரவை சார்பில் ஒண்டிவீரன் 255வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. க.பரமத்தி கடைவீதியில் பட்டியலின விடுதலைப் பேரவை சார்பில் இந்தியாவின் முதல் விடுதலைப் போராளி மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களது 255வது நினைவு நாளில் அவரது படம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பட்டியலின விடுதலைப் பேரவை நிறுவன தலைவர் ஆனந்தராஜ், இந்தியாவின் முதல் விடுதலைப் போராளி மாமன்னர் ஒண்டிவீரன் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.