தோகைமலை, ஆக.20: போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போ லீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி கம்பத்தாம்பாறை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளையராஜா (35). என்ற கூலித்தொழிலாளி ரகளை செய்து கொண்டிருப்பதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற தோகைமலை போலீசார் இளையராஜாவை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement