கரூர், நவ. 19:கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தெற்கு தெரு மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள 10வது வார்டில் அதிகளவு மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் தெற்கு தெருவில் மின்கம்பம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனுவில் மக்கள் தெரிவித்துள்ளனர்.


