கரூர், நவ. 19: கரூர் பெரியாண்டாங்கோயிலில் பூங்கா விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை. கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள பூங்கா வளாகத்தில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் பகுதியில் இந்த பகுதியினர் நலன் கருதி உடற்பயிற்சியுடன் கூடிய பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது.
சில ஆண்டுகள் இவை பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி திரும்பவும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


