Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அரவக்குறிச்சியில் ஏடிஎம் காவலாளி உயிரிழப்பு

அரவக்குறிச்சி, நவ.19: அரவக்குறிச்சி தனியார் ஏடிஎம் காவலாளி உயிரிழந்தையடுத்து போலீசார் விசாரணை. அரவக்குறிச்சி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் சென்டரில் காவலாளியாக பணியாற்றி வந்த சுப்பிரமணி (51) செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சின்ன புத்தூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுப்பிரமணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரவக்குறிச்சியில் செயல்படும் தனியார் ஏடிஎம்மில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தபோது சுப்ரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்ததுடன், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று பதிவு கட்டணம் செலுத்தி மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.