அரவக்குறிச்சி, அக். 18: அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு, அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மற்றும் பள்ளப்பட்டி பேருந்து நிலையங்களில் பல்வேறு இடங்களில் ஒத்திகை பயிற்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் சூழலில் எவ்வாறு தன்னைக் காக்க வேண்டும். அவசரகாலங்கலில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கும்முறை, பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்த துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக தீயணைப்பு படையினரின் குழுவும் செயல்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

