கடவூர், அக். 18: கரூர் மாவட்டம் கடவூர் அருகே மாவத்தூர் ஊராட்சி கூனமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் விவசாயி. ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். நாகராஜ், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை, வீட்டின் அருகே வழக்கமாக கட்டிவைத்துவிட்டு தூங்கியுள்ளார். கட்டி உள்ளார். பின்னர் நானராஜ் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் அன்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார்.
நள்ளிரவில் நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு நாகராஜ், தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்து உள்ளார். அப்போது வீட்டிற்கு அருகே கட்டி இருந்த 2 ஆடுகள் மாயமாகி இருந்து உள்ளதை கண்டு நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நாகராஜ், பாலவிடுதி காவல் நிலைத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆடுகளை தேடிவருகின்றனர்.

